இங்கிலாந்து நாட்டின்
கடல்பகுதியின் அருகே வெறும்
22 பேர் மக்கள் தொகை கொண்ட
ஒரு நாடு இருக்கின்றது. அந்த
நாட்டின் பெயர் Sealand.
22 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டிற்கு ஒரு அரசரும்
இருக்கின்றார்.
தனி கரன்சியுடன் அந்த
நாட்டின் மக்கள்
வாழ்ந்து வருகின்றனர்.
இரண்டாம்
உலகப்போருக்கு பின்னர்
தோன்றிய இந்த
நாடு இங்கிலாந்தின்
கட்டுப்பாட்டில் இருப்பதாக
கூறப்பட்டாலும், அந்த நாட்டின்
அரசராக தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்டவர்
இது தனிநாடு என்று கூறிவருகிறார்.
அவர் சொல்வதுபோன்று இது தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டால் உலகின் மிகச்சிறிய
நாடு இதுவாகத்தான் இருக்கும்.
இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக
கட்டப்பட்ட இரண்டு காங்கிரீட்
தூண்களுக்கு மத்தியில்
அமைக்கப்பட்ட ஒரு இடத்தின்
பெயர் தான் Sealand.
1967ஆம்
ஆண்டிற்கு பின்னர் இந்த
பகுதியில் சிலர் குடிபெயர
ஆரம்பித்தனர். அந்த பகுதியில்
வாழ்ந்த Prince Michael
என்ற 67வயது நபர், அந்த
நாட்டின் அரசராக
இருந்து வருகிறார்.
இவருடைய தந்தை , Roy
Bates என்பவர் இந்த பகுதியின்
அரசராக தன்னைத்தானே முடிசூட்டிக்கொண்டார்.
அவருக்கு பின்னர் அவருடைய
மகன் Prince Michael தற்போது அரசராக உள்ளார்.
இந்த பகுதி மக்களின்
ஒரே தொழில் மீன்பிடிப்பதுதான்.
இந்த நாட்டிற்கென
தனி கரன்சி உள்ளது. இந்த
நாட்டின் பரப்பளவு 5,290 சதுர
அடி ஆகும். கோடைகாலத்தில்
இந்த பகுதியில் சுற்றுலாப்பயணிகள்
பெருமளவு வருவதாக
கூறப்படுகிறது
0 comments:
Post a Comment